நாமக்கல்:முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் இன்று (மார்ச் 15) லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் அருண்குமார், சூலூர் ஒன்றிய செயலாளர் கந்தவேல் ஆகியோரின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் அடுத்த கொண்டிசெட்டிபட்டி வசித்து வரும் வேலுமணியின் உறவினரான ஆசிரியர் சரவணக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் இன்று காலை சோதனை நடத்த சென்றனர்.
நாமக்கல்லில் உள்ள வேலுமணியின் உறவினர் வீட்டில் சோதனை அப்போது, அவரது வீடு பூட்டி இருந்ததால் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சரவணகுமாரை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். அவர் கோவையில் இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு உடனடியாக வருமாறு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதன்படி தற்போது, அவரின் வருகைக்காக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர். ஆசிரியர் சரவணக்குமார் வரதன் இன்ப்ரா நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை