நாமக்கல் மாவட்டம், பரமத்தி சாலையில் நகர ஊரமைப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வீட்டுமனைகள், கட்டடங்களுக்கு மதிப்பீடு செய்து அங்கீகாரம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
நாமக்கல்லில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை - Namakkal
நாமக்கல் : மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ஐந்து லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்
இந்நிலையில், இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று (அக்.16) இரவு தொடங்கி விடிய விடிய சோதனை நடத்தினர். துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத ஐந்து லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தப் பணம் யாரிடம் இருந்து பெறப்பட்டது, தரகர்கள் எவரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.