தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்வாய் செல்லும் வழித்தடத்தில் சடலங்களை எடுத்துச் செல்லும் பட்டியலின மக்கள்! - Veerappampalayam without cemetery facilities

நாமக்கல்: சுடுகாட்டிற்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், பல ஆண்டுகளாகப் பட்டியலின மக்கள் கால்வாய் நீர் செல்லும் வழித்தடத்தில் சடலத்தை எடுத்துச் செல்லும் அவல நிலை தொடர்கிறது.

நீரில் மிதந்தபடி சடலங்களை எடுத்துச் செல்லும் பட்டியலின மக்கள்!
நீரில் மிதந்தபடி சடலங்களை எடுத்துச் செல்லும் பட்டியலின மக்கள்!

By

Published : Nov 8, 2020, 12:55 PM IST

நாமக்கல் மாவட்டம், தட்டாங்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையம் மேல் காலனிப் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறப்பு நேர்ந்தால் சடலத்தை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று அடக்கம் செய்யும் அவல நிலை உள்ளது.

கடந்த 6ஆம் தேதி வீரப்பம்பாளையம் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பொன்னி என்ற மூதாட்டி உயிரிழந்தார். அவரது சடலத்தைக் கொண்டு செல்ல வழி இல்லாமல், கால்வாய் நீரில் மிதந்தபடி சடலத்தை இளைஞர்கள் சுமந்து சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.

நீரில் மிதந்தபடி சடலங்களை எடுத்துச் செல்லும் பட்டியலின மக்கள்!

இது குறித்து அரசு அலுவலர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை முறையிட்டும், இதுவரை யாரும் பாதை அமைத்துத் தராததால், இன்றும் அந்தக் கிராமத்தில் இந்த நிலைமை நீடிக்கிறது.

இதையும் படிங்க; 100 ஆண்டுகளாக சடலங்களை எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லை!

ABOUT THE AUTHOR

...view details