தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்நடை மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு! - கால்நடை மருத்துவ பட்டதாரி

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவப் பட்டதாரி எனப்படும் Veterinary Graduate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு...
கால்நடை மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு...

By

Published : Oct 4, 2022, 5:24 PM IST

காலிப்பணியிடங்கள்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சுயநிதித் திட்டத்தில் பணிபுரிவதற்காக கால்நடை மருத்துவப் பட்டதாரி Veterinary Graduate பதவிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை வளர்ப்பில் இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்:

Veterinary Graduate – ரூ.40,000

தேர்வு முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 10.10.2022 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1663070955.pdf என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அசல் சான்றிதழ்களுடன், பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மகளிர் மற்றும் மகப்பேறு துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் – 637 002 என்ற முகவரியில் நேர்காணலில் பங்கேற்கலாம் என்றும்; அந்த நேர்காணலானது வரும் 10.10.2022 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறுவதால், மேற்கூறிய சான்றிதழ்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

ABOUT THE AUTHOR

...view details