நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் இயற்கை முறையில் கால்நடைகள் வளர்ப்பு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மோகன் கருத்தரங்கை தொடங்கிவைத்தார்.
சிறப்புரையாற்றிய பதப்படுத்தப்பட்ட வேளாண் உணவுப்பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி நிறுவனத்தின் மேலாளர் பிர் சிங் நேகி பேசுகையில், “கால்நடை வளர்ப்பில் தீவனப் பொருள்கள், மருந்து பொருள்கள், இனப்பெருக்கம் உள்ளிட்டவைகளில் ரசாயனம் கலந்த பொருள்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு இயற்கை முறையில் கிடைக்கும் தீவனப் பொருள்கள், புண்ணாக்கு மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகள் ஆரோக்கியமாக வளர்வதோடு, பால் உற்பத்தி திறனும் அதிகரிப்பதோடு, தரமான இறைச்சியும் கிடைக்கும் என்றும் எனப் பேசினர். எனவே விவசாயிகள் இயற்கை முறையில் கால்நடைகளை வளர்க்க வேண்டும்” என வலியுறுத்தினார்.