நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில், ஒரேநாளில் மூன்றுபேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள், சமூகநல ஆர்வலர்கள் நீட் தேர்வால் நடக்கும் கொலைகளை தடுத்து நிறுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சித்தனர். நீட் தேர்வுக்குப் பின்னால் இருக்கும் சர்வாதிகாரப்போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த மோதிலால் குடும்பத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு திமுக இளைஞரணி சார்பாக ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண உதவியை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இது தற்கொலை கிடையாது தொடர்ந்து கூறிவருகிறேன். பாசிச பாஜக ஆட்சியும், தமிழ்நாட்டை ஆளும் அடிமை ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சியும் சேர்ந்து செய்த கொலைகள். அனைவரது எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மிக தந்திரமாக நீட் தேர்வை புகுத்தியுள்ளனர். இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.