நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டி கங்காணி தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் தாமரைக்கண்ணன் (21), திருப்பூரில் தனியார் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், சொந்த ஊருக்கு வந்த தாமரைக்கண்ணன் தனது நண்பர் முரளியுடன் (26) நேற்றிரவு(மார்ச் 10) பொட்டிரெட்டிப்பட்டி ஜல்லிக்கட்டு திடல் பகுதியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். வெகுநேரமாகியும் இருவரையும் காணவில்லை எனக் குடும்பத்தினர் தேடிச் சென்றுள்ளனர். அப்போது, இருவரும் அங்கு மயங்கிய நிலையிலிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இருவரையும் ஆம்புலன்ஸில் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே தாமரைக்கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். முரளி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.