நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பிலிக்கல்பாளையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட அச்சு மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு கரும்பு சாறுகளுடன் அஸ்கா சர்க்கரை கலந்து அச்சு வெல்லம், உருண்டை வெல்லத்தை தயாரிப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி பிலிக்கல்பாளையம், சாமிநாதபுரம், வெள்ளதாரை பகுதியில் இயங்கிய வரும் ஆலைகளை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர்.
அப்போது சுந்தர், முனுசாமி ஆகியோருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் கொட்டகை ஆலையில் சோதனை மேற்கொண்டபோது அஸ்கா சர்க்கரை கொண்டு வெல்லம் தயாரிப்பது தெரியவந்தது.
அஸ்கா கலப்படம் செய்த இரண்டு ஆலைக்கு சீல் இதனையடுத்து, இந்த ஆலைகளில் தயாரிக்கப்பட்ட வெல்ல மாதிரிகளை உணவு பகுப்பாய்வுக் கூடத்துக்கு சோதனைக்காக எடுத்துச் சென்றனர். உடனடியாக இரண்டு ஆலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. வெல்லத்தில் கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 2 டன் அஸ்கா சர்க்கரை, தயாரித்து வைக்கப்பட்ட 4600 கிலோ அச்சு வெல்லத்தையும் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: போலி பணி நியமன ஆணையை கொண்டு வந்து அரசு வேலை கேட்ட இளைஞர்!