நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரின் உத்தரவின் பேரில் மாவட்ட மதுவிலக்கு காவல் துறையினர், சேந்தமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
நாமக்கல்லில் கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது, 10 லிட்டர் சாராயம் பறிமுதல் - கள்ளச்சாராய காய்ச்சி விற்றல்
நாமக்கல்: சேந்தமங்கலம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
namakkal-10-liters-of-liquor-seized
அதில், சேந்தமங்கலம் பச்சுடையாம்பட்டி புதூர் பகுதியில் கள்ளச்சாராயத்தை பதுக்கி விற்பனை செய்து வந்த ராஜேந்திரன், உதயகுமார் ஆகிய இருவரும் சிக்கினர். அதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களின் சாராய ஊரலையும் அழித்தனர்.
இதையும் படிங்க:தர்மபுரியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர்கள் 183 பேர் கைது!