நாமக்கல் மாவட்ட நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பல இடங்களில் சாலைகளில் நடந்து செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகளிடம் அடையாளம் தெரியாத திருட்டு கும்பல் ஒன்று தொடர்ந்து செல்போன்களை பறித்துச் செல்வதாக காவல் துறையினருக்குத் புகார்கள் வந்துள்ளன.
இந்நிலையில், செல்போன் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை பிடிக்க நகர் பகுதிகளிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த அபுதாகீர் என்பவர் செல்போனை வழிப்பறி செய்வதும், அந்த செல்போன்களை அதே பகுதியில் வசிக்கும் மோகன்ராஜிடம் கொடுத்து அதனை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
