தமிழ்நாடு முழுவதும் 14 லட்சம் லாரிகள் பயன்பாட்டில் உள்ளன. டீசல் விலை உயர்வு காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பார்சல் லாரிகளின் வாடகை 25 விழுக்காடு உயர்ந்தது.
பின்னர் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் பொதுக்குழு, ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 3) நடைபெற்றது.
லாரி வாடகை 30 விழுக்காடு உயர்வு அதில் லாரி வாடகையை 30 விழுக்காடு உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நேற்று இரவு முதல் லாரி வாடகை உயர்த்தப்பட்டது.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது, "ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பொருள்களை கொண்டு செல்லும்போது லாரி வாடகையுடன் சேர்த்து அந்தப் பொருள்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
எனவே லாரி வாடகை உயர்ந்ததால் காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது" என்றனர்.
லாரி வாடகை 30 விழுக்காடு உயர்வு இது ஏழை, நடுத்தர மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் எனப் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டீசல் விலை உயர்வை கண்டித்து ஜேசிபி உரிமையாளர்கள் வாகனப் பேரணி!