தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீ விபத்திலிருந்து லாரியை காப்பாற்றிய ஓட்டுனர்! - தீப்பெட்டி லாரி

தீப்பெட்டி பாரம் ஏற்றி சென்ற லாரி பாலத்தின் அடிப்பாகத்தில் உரசி இலேசாக தீப்பற்றியது. எனினும், ஓட்டுனரின் சமயோஜித முடிவால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

லாரியை காப்பாற்றிய ஓட்டுனர்
லாரியை காப்பாற்றிய ஓட்டுனர்

By

Published : Oct 3, 2020, 10:18 PM IST

நாமக்கல்: நாமக்கல்லை சேர்ந்த ராம்குமார் என்பவர் தனது லாரியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி பாரம் ஏற்றி கொண்டு நாமக்கல் வழியாக ஹரியானா மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

இன்று(அக்.3) மாலை லாரி நாமக்கல் நகர் பகுதியில் இருந்து நல்லிபாளையம் வழியாக புறவழிச்சாலைக்கு சென்றது.

லாரியை காப்பாற்றிய ஓட்டுனர்

அப்போது அதிக உயரம் கொண்ட தீப்பெட்டி பாரம் சாலை மேம்பாலத்தின் அடிப்பாகத்தில் கான்கிரீட் தூணில் இலேசாக உரசி தீப்பற்றியது.

தீப்பற்றியதை கண்ட ஓட்டுனர் உடனடியாக லாரியை நிறுத்தி வாகனத்தில் இருந்த தண்ணீரை கொண்டு தீ மேலும் பரவாமல் தடுத்தார்.

இதனைத்தொடர்ந்து லாரியின் சக்கரங்களில் உள்ள காற்றின் அழுத்தத்தை குறைத்து பாரத்தின் மட்டத்தை தாழ்வடைய செய்து பாலத்தின் அடிப்பகுதியில் மோதாமல் லாரியை எடுத்து சென்றனர்.

ஓட்டுனரின் இந்தச் சமயோஜித முடிவால் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: பிரைடு ரைஸ் தராததால் உணவக காசாளரைத் தாக்கிய காவலர்கள்

ABOUT THE AUTHOR

...view details