நாமக்கல்: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில், அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக நாமக்கல், மாவட்டம் கொல்லிமலையில் உள்ள செம்மேடு, ஆரியூர் நாடு, வாளவந்திநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து மாவட்ட வனத்துறை உத்தரவிட்டுள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.