நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது கொல்லிமலை. இங்கு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மூலிகைகள் பரவி காணப்படுவதால் மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி பிரசித்தி பெற்றது. இந்த அருவியில் குளிக்க சுமார் 1200 படிக்கட்டுகளை கடந்து செல்லவேண்டும். இதற்காகவே சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் கொல்லி மலை வந்துசெல்வர்.
இந்நிலையில் அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி ஆகியவற்றில் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொல்லிமலைக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.