நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். கரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது. தினசரி இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்து 500 பேர் வரை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.