நாமக்கல் மாவட்டம் ராசாம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடிவை ஹரியானாவைச் சேர்ந்த செளத் இந்தியா டோல்வேஸ் என்கிற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் பெற்று சுங்கக் கட்டணம் வசூலித்து வருகிறது.
இந்நிலையில், ராசாம்பாளையம் சுங்கச்சாவடி ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்படும் தினக்கூலியான ரூ.380 ரூபாயை உயர்த்தி தர வேண்டும், சுங்க சாவடியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தின் சார்பில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கி நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்திவந்தனர்.
ராசாம்பாளையம் சுங்க சாவடி இதுதொடர்பாக நடைபெற்ற அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களது பணிகளை செய்யாமல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்ய ஆட்கள் இல்லாதால், சாவடிக்கு வரும் அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்கின்றன. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சாலைக்கு வந்து போராடினால் கைது செய்வதாக பரமத்தி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் போராட்டகாரர்களை எச்சரித்ததால் போராட்டம் பரபரப்பின்றி நடந்தது.
இதையும் படிங்க:வரி கேட்டதால் ஆத்திரம் - சுங்கத்துறை அலுவலரை மிரட்டிய நபர் கைது!