தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல்போனதன் விளைவே பொருளாதார மந்தநிலை...!' - நல்லசாமி

நாமக்கல்: விவசாயத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்காமல்போனதன் விளைவுதான் பொருளாதார மந்தநிலைக்கு காரணம் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

nallasamy

By

Published : Sep 10, 2019, 2:55 PM IST

நாமக்கல்லில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக வந்த தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "விவசாயத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் போனதன் விளைவுதான் பொருளாதார மந்தநிலைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட எந்த இலவசமும் தேவையில்லை.

விவசாய ஆணையத்தின் பரிந்துரையை முழுமையாக அமல்படுத்தினாலே போதுமானது. தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தொழில்கள் நமது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் அமைந்திட வேண்டும். சென்னையில் உள்ள மரங்களில் விளம்பரம் செய்வதை தடை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனை நாடு முழுவதும் அமல்படுத்தி மரங்களை காக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details