நாமக்கல், வசந்தபுரம் ஊராட்சியில் ரூ.1.70 கோடி மதிப்பில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பூரண மதுவிலக்கு என்பதுதான் தமிழ்நாடு அரசின் கொள்கையாகும்.
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுபானக்கடைகள் குறைக்கப்பட்டு வருகின்றன. தற்போது அரசின் வருவாயைப் பெருக்கும் வகையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் கூடுதல் வருவாயாக கிடைக்கும். வருகின்ற கோடை காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டின் மின்தேவை 17ஆயிரம் மெகாவாட்டாக இருக்கும்.