தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்! - முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி

நாமக்கல்: மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார்.

நாமக்கலில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!
நாமக்கலில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

By

Published : Aug 21, 2020, 11:02 AM IST

பொதுப்பணித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.14.44 கோடி மதிப்பீட்டில் 26 முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்துவைத்தும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.137.65 கோடி மதிப்பீட்டில் 130 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,

பல்வேறு துறைகளின் சார்பில் 19,132 பயனாளிகளுக்கு ரூ.91.26 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.243.35 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்துவைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

நாமக்கல்லில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாமக்கல் மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க...கரோனா காலத்தில் குறைந்த விலையில் உணவளிக்கும் பெண்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details