தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல் வெடி விபத்தில் 4 பேர் மரணம்: முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

நாமக்கல் மோகனூரில் இன்று காலை வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு நிவாரணம் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 31, 2022, 6:24 PM IST

நாமக்கல் : மோகனூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் குமார் என்கின்ற தில்லை குமார். இவருக்குத் திருமணமாகி பிரியா என்ற மனைவியும் ஐந்து வயதில் பெண் குழந்தையும் உள்ளது. தில்லை குமார் மோகனூரிலும் ஓலைப்பாளையத்தில் அரசின் உரிமம் பெற்று பட்டாசுக் கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில், நாளை (ஜன.01) புத்தாண்டு என்பதால் அதிகப்படியான பட்டாசுகள் விற்பனையாகும் என நினைத்த தில்லை குமார் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிகப்படியான பட்டாசுகளை வாங்கி தனது வீட்டில் குவித்து வைத்துள்ளார். இந்த சூழலில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டிலிருந்த பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்த வெடி விபத்தில் வீட்டிலிருந்த தில்லை குமார், அவரது மனைவி பிரியா, அவரது தாயார் செல்வி மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெரியக்காள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் தில்லை குமாரின் வீடு தரை மட்டமானது. மேலும் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைத்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாகத் தில்லை குமாரின் 5 வயது மகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

பட்டாசு வெடித்த விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு

இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவிப்பதாகவும், வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும் படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கடன் அன்பை முறிக்கும்; கழுத்தையுமா அறுக்கும்: திருச்சியில் நடந்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details