நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடுத்த பைல்நாடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயியான இவர் நேற்று தனக்கு சொந்தமான கால்நடைகளை அதே பகுதியில் உள்ள வயல்வெளிக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். அங்கு திடீரென பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தபோது, இடி தாக்கியதில் பழனிச்சாமி படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பழனிச்சாமியின் கால்நடைகள் அனைத்தும் பரிதாபமாக உயிரிழந்தன.
கொல்லிமலை பகுதியில் இடி தாக்கி விவசாயி படுகாயம் - kollimalai
நாமக்கல்: கொல்லிமலை பகுதியில் இடி தாக்கியதில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயமடைந்த பழனிசாமி
பின்னர் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடிவந்து காயமடைந்த பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்யும் போது பொதுமக்கள் யாரும் வெளியிலோ அல்லது மரத்தின் அடியிலோ ஒதுங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.