தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி ரூ. 3.46 லட்சம் பணம் கொள்ளை: மூவர் கைது! - டாஸ்மாக் கடை ஊழியரைத் தாக்கிய மூவர் கைது

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே ரோந்து பனியிலிருந்த காவல் துறையினர், டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி 3 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மூன்று இளைஞர்களை கைது செய்தனர்.

டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிய மூவர்
டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிய மூவர்

By

Published : Sep 27, 2020, 6:31 PM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாரண வீரன் தலைமையிலான காவல் துறையினர், மோகனூர் சாலையில் இருசக்கர வாகன தனிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் மேலதிருப்பந்திருத்தியைச் சேர்ந்த கஜேந்திரன் (37), குலாம் (எ) சதாம் உசேன் (27), கரந்தை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (19), ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி வேலகவுண்டம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ராஜேந்திரனை கத்தியால் வெட்டியும், மிளகாய் பொடி தூவியும் 3 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்தச்சென்ற கும்பல் என்பது தெரியவந்தது. பொய்யேரியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டு பணம் தராமல் விற்பனையாளரை கத்தியை காட்டி மிரட்டியதும் தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: முதியவர்களை குறிவைத்து நூதன கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details