தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ. 6 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள் கடத்தல்: மூவர் கைது! - நாமக்கல் குற்றச் செய்திகள்

நாமக்கல்: ராசிபுரம் அருகே மினி ஆட்டோவில் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்களை கடத்திவந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ரூ. 6 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள் கடத்தல்: மூவர் கைது!
Gutka seized by police

By

Published : Sep 16, 2020, 6:24 AM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பல்லவநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த மினி ஆட்டோவை மடக்கி சோதனை செய்ததில், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்கம் (27), பேளுக்ககுறிச்சியைச் சேர்ந்த கணபதி (42), ராசிபுரத்தைச் சேர்ந்த நிர்மல்சிங் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும், சேலத்திலிருந்து கடத்திவரப்பட்ட போதைப்பொருள்கள் பட்டணம்,புதுப்பட்டி,நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டுசென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து போதைப்பொருள்கள், வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து, மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details