தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ. 21 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் கடத்தல்: 3 பேர் கைது! - ஆந்திரா மாநிலம்

நாமக்கல்: ஆந்திராவிலிருந்து லாரியின் மூலம் ரூ. 21 லட்சம் மதிப்பிலான, 210 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ரூ.21 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் கடத்தல்: மூன்று பேர் கைது!
Cannabis abduction

By

Published : Sep 2, 2020, 4:22 PM IST

நாமக்கல் காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட காவல் துறையினர், சேலம் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சுமார் 210 கிலோ எடை கொண்ட 105 பொட்டலங்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான 210 கிலோ கஞ்சாவை லாரியுடன் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

லாரியிலிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ண பெருமாள் (42), உத்தமபாளையத்தைச் சேர்ந்த குமார் (43), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலையா (43) ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆந்திராவிலிருந்து லாரிகள் மூலம் கஞ்சாவை பொட்டலங்களாக மாற்றி, கடத்தி வந்து தமிழ்நாட்டில் பல இடங்களில் விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 62 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 620 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தி, விற்பனை செய்துள்ளதாக மொத்தம் 17 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் எச்சரித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details