நாமக்கல் மாவட்டத்திற்கு கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 21ஆம் தேதி வரவிருக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கும் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் இன்று(ஆக.19) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்று, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கடும் மழை பெய்ததால் மின் கம்பங்கள், கோபுரங்கள் பழுது அடைந்தன. அவைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளுக்கும் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும், மின்வாரியத்தில் கேங்க்மேன் பணி நியமன வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பணியிடங்கள் நிரப்பப்படமால் உள்ளன.