நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மல்லசமுத்திரம் ஒன்றியம் பள்ளக்குளியில் ஆட்டோ ஒன்றில் சுமார் 10 சாக்குப்பை மூட்டை லோடுகளை, முன்னாள் அதிமுக பள்ளக்குழி ஊராட்சித் தலைவர் காந்திமதி செல்வகுமார் வீட்டில் இறக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு திமுகவினர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மூட்டைகளைப் பிரித்து பார்த்தபோது, அதில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த சேலைகள் எனத் தெரியவந்தது.