தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் தொடங்கிய நடமாடும் டீசல் விற்பனை நிலையம் - நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்: திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடமாடும் டீசல் எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனச் சேவை தொடக்க விழா நடைபெற்றது.

thiruchengode-mobile-diesel-filling
thiruchengode-mobile-diesel-filling

By

Published : Oct 2, 2020, 7:13 AM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 500 லிட்டருக்கு மேல் டீசல் தேவைப்படுபவர்களுக்கு இருக்கும் இடத்திற்கே சென்று டீசல் விநியோகம் செய்யும் சேவையை திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரி கணேசன் தொடங்கிவைத்தார்.

நடமாடும் டீசல் விற்பனை நிலையம்

பின்னர், இது குறித்து பாரி கணேசன் கூறும்போது "ரிக் மற்றும் லாரி, போன்ற வாகனங்களுக்குத் தேவைப்படும் டீசலை இருக்கும் இடத்திற்கே சுமார் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனம் மூலம் கொண்டுசென்று விநியோகிக்கும் வகையில் ஒரு நடமாடும் டீசல் விற்பனை நிலையத்தை நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாகத் தொடங்கியுள்ளோம். இதனால் ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் விலை குறையும் வாய்ப்புள்ளது" என்றார்.

திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரி கணேசன்

ABOUT THE AUTHOR

...view details