நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பாவடித்தெருவில் ஜெய பரணி ஜூவல்லர்ஸ் என்ற கடையை வைத்து நடத்தி வருபவர் முத்துசாமி. இவரது கடையில் கடந்த ஒன்பதாம் தேதி அதிகாலை பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் கடையிலிருந்த 45 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கடை உரிமையாளர் முத்துசாமி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து நகர காவல் ஆய்வாளர் ராஜகுமார் தலைமையிலான 7 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
நகைகள் திருட்டு: மூவர் கைது - நாமக்கல்
நாமக்கல்: திருச்செங்கோடு அருகே நகைக் கடையின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல்
கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்படைய ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த ரப்பர் ஜெயபிரகாஷ் (24) சிவகங்கையை சேர்ந்த வெள்ளைசாமி(32), பிரேம்குமார் (25) ஆகியோர் நகைக் கடையை உடைத்து திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ஒரு கிலோ மதிப்புள்ள 13 வெள்ளி பொருட்களை மீட்டனர். திருடப்பட்ட மற்ற பொருட்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.