சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் யுவராஜ். சங்ககிரி சுங்கச்சாவடியில் பணியாற்றி வரும் இவர், தனது திருமண நாள் என்பதால் மனைவி அனிதா மற்றும் மகன் ரித்திக்ரோஷன் ஆகியோருடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் மாட்டியிருந்த கைப்பை தவறி 50 அடி பள்ளத்தில் விழுந்தது. அதில் பணம், செல்போன் ஆகியவை இருந்ததால் திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.