ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் தர்பார். இந்த படம் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் நேற்று வெளியானது.
மரக்கன்றுகளை வழங்கிய ரஜினி ரசிகர்கள் அதேபோல், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலுள்ள இரண்டு திரையரங்குகளில் தர்பார் திரையிடப்பட்டது.
இதனையடுத்து திருச்செங்கோடு நகர தலைமை ரசிகர் மன்றம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மரக்கன்றுகளை திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அக்பர் பாஷா, நகரச் செயலாளர் ஐயப்பன், துணை செயலாளர் தளபதி கண்ணன் உள்ளிட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.