தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொல்லிமலை நீர் மின் திட்டம் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் - அமைச்சர் தங்கமணி - தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது

நாமக்கல்: கொல்லிமலை நீர் மின் திட்டம் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

minister thangamani
minister thangamani

By

Published : Feb 10, 2021, 3:45 PM IST

நாமக்கல் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தின் விற்பனை நிலையத்தின் சார்பில் சுயசேவை பிரிவுக்கு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை மின் துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கரோனா காலமானாலும், மழை மற்றும் வெயில் காலமானலும் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக உள்ளது. அனைத்து தொழிற்சாலைகளிலும் இயங்க தொடங்கியுள்ளதால் மின் தேவை அதிகரித்ததாலும் அதற்கேற்ப மின் உற்பத்தியும் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் மின் தட்டுப்பாடு என்பதே கிடையாது. தமிழ்நாட்டில் மின் தேவைக்கேற்ப மின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

பின்பு, கொல்லிமலை நீர் மின் திட்டம் பணிகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, சுரங்கம் அமைக்கும் பணி நடைபெறுவதால், இன்னும் ஒராண்டுக்குள் முடிக்கப்படும் என பதிலளித்தார்.

கொல்லிமலை நீர் மின் திட்டம் ஓராண்டுக்குள் முடிக்கப்படும்

இதனையடுத்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜராகாமல் இழுத்தடிப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டுவது தொடர்பான குறித்த கேள்விக்கு, துணை முதலமைச்சர் குறித்து வேண்டுமென்றே விஷம பரப்புரை செய்து வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - சேலத்தில் பரபரப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details