நாமக்கல் மாவட்டத்தில் நாளை (டிச.29) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இதனையொட்டி முதலமைச்சர் பயண ஏற்பாடுகளை ஆய்வு செய்த மின்துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "முதலமைச்சர் பழனிசாமி நாளையும் (டிச .29 -30) நாளை மறுதினமும் பொதுமக்களையும், பல்வேறு சமுதாய மற்றும் தொழில் அமைப்பினரையும் சந்தித்து பேசவுள்ளார். இந்தத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்கவில்லை.
முதலமைச்சரின் தேர்தல் பரப்புரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது - அமைச்சர் தங்கமணி - முதலமைச்சரின் தேர்தல் பரப்புரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
நாமக்கல்: இது அதிமுக தனியாக ஆரம்பித்த தேர்தல் பரப்புரை, கூட்டணி ஏற்பட்டு அதன் பின்னர் நடைபெறும் பரப்புரை கூட்டம் இல்லை. இதில் ஏதும் வில்லங்கம் கற்பிக்க வேண்டாம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
minister thangamani
இது அதிமுக தனியாக ஆரம்பித்த தேர்தல் பரப்புரை, கூட்டணி ஏற்பட்டு அதன் பின்னர் நடைபெறும் பரப்புரை கூட்டம் இல்லை. இதில் ஏதும் வில்லங்கம் கற்பிக்க வேண்டாம். முதலமைச்சரின் தேர்தல் பரப்புரை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதோடு, எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:’பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும்’ - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!