தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 5, 2021, 9:24 PM IST

ETV Bharat / state

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் தங்கமணி

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும், ஆய்வுப் பணி முடிந்தபின்பு நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

the cauvery joint drinking water project
காவிரி கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்'- அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் மாநில மின்சாரம் மற்றும் மதுவிலக்கு- ஆயத்தீர்வை துறை அமைச்சர் கலந்துகொண்டு பள்ளி மாணரவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும், எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட 29 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த 396 பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாமக்கல் மாவட்டத்தில் வேலைக்குச் செல்லும் 6000மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. பூலாம்பட்டியிலிருந்து காவிரி குடிநீரை மல்லச்சமுத்திரம் ஒன்றியம், எலச்சிபாளையம் ஒன்றியம், பரமத்தி ஒன்றியத்திலுள்ள சில பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வருவதற்கான ஆய்வுப் பணிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்'- அமைச்சர் தங்கமணி

ஆய்வு முடிந்தவுடன் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும். உயர் மின்கோபுர திட்டத்தைப் பொறுத்தவரை உரிய இழப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர். அதுகுறித்து முதலமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும்" என்றார்.

மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டாம் முறையாக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளிக்கவுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் டெல்லிக்கே வேண்டுமானாலும் போய் கொடுக்கட்டும் என்றார்.

இதையும் படிங்க:ஊழல் பழிபோடாமல் வழிகாட்டும் அரசியலை உருவாக்குவோம் - கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details