நாமக்கல்லிலிருந்து பரமத்தி நோக்கிச் சென்ற சரக்கு வேன் ஒன்று காவேட்டிப்பட்டி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் காயமடைந்த நிலையில் வேனில் இருந்த அரிசி மூட்டைகள் சாலையில் சிதறி நாசமாயின.
படுகாயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சாலையில் கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில், வேனில் ஏற்றிச் சென்ற இரண்டு டன் ரேஷன் அரிசி கோழிப்பண்ணைக்கு கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.