நாமக்கல்மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது மலையாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மலையாள தெய்வத்திற்கு, வருடந்தோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் ஆண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே பங்கேற்று விழாவை நடத்துவார்கள்.
இவ்வாறு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த திருவிழா, கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் நேற்றிரவு திருவிழா நடைபெற்றது. இதில், நள்ளிரவில் மலையாள தெய்வத்திற்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.