நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் அங்கன்வாடி மையமும் இயங்கி வருகிறது. இங்கு, புதன்சந்தையைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த நான்கு வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கும் அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயந்திக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஆசிரியர் சரவணனும் அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயந்தியும் பள்ளிக் கழிவறையில் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதைக்கண்ட பள்ளி மாணவர்கள், தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியரிடம் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். பின்னர், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ், சம்பந்தப்பட்ட இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.