தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'டாஸ்மாக் விற்பனை நேரத்தைக் குறைக்க வேண்டும்' - பணியாளர்கள் கோரிக்கை - TASMAC association request

நாமக்கல்: டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TASMAC association press meet in Namakkal
TASMAC association press meet in Namakkal

By

Published : Jul 30, 2020, 5:43 AM IST

டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நாமக்கல்லில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய ஒருங்கிணைப்பாளர் சரவணன், “நாமக்கல் மாவட்டத்தில் 188 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டுவருகின்றன.

இதில் மொத்தம் 700 பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்தக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை தளர்வின்றி பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படுவதால், சனிக்கிழமை மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

அந்நேரங்களில் காவல் துறை சார்பில் டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு வழங்கி கூட்டத்தைக் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளின் விற்பனை நேரத்தை மாலை 5 மணியாகக் குறைக்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் நிவாரணமும், வாரிசுகளுக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும்.

டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்திற்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். 17 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக உள்ள எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்படுகிறது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details