தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Video - மேற்கு ஆப்பிரிக்காவில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! - மேற்கு ஆப்பிரிக்காவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்

மேற்கு ஆப்பிரிக்காவில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரிக் தொழிலாளிகளை மீட்க கோரும் வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.

வேதனை தெரிவிக்கும் தமிழர்கள்
வேதனை தெரிவிக்கும் தமிழர்கள்

By

Published : Apr 8, 2022, 5:19 PM IST

நாமக்கல்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 தொழிலாளிகள், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா பாசோ என்ற பகுதிக்கு, கட்டுமானப்பிரிவில் ஒன்றான ரிக் செலுத்தும் வேலைக்குச் சென்றுள்ளனர். அவர்கள், தங்களுக்குப்போதிய உணவு இல்லாமல், தங்குமிடம் இல்லாமல் தவித்து வருவதாகவும், அவர்களை இந்திய அரசு மீட்க வேண்டும் எனவும் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த வீடியோவில் அவர்கள் கூறியதாவது, 'நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச்சேர்ந்த தங்கவேல் என்பவர் தனக்குச்சொந்தமான 10 ரிக் வாகனங்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 6 நபர்களை மேற்கு ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்.

அவை பழைய வாகனங்கள் என்பதால், அவ்வப்போது பழுதடைந்து வருகிறது. இது குறித்து தங்கவேலுவிடம் தெரிவித்தபோது, அவர் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். இங்கிருந்த 6 பேரில் 3 பேர் தமிழ்நாடு திரும்பிய நிலையில், மீதமுள்ள 3 பேரை நாடு திரும்ப விடாமல் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நபர்கள் மூலம் பாஸ்போர்ட்டை பிடிங்கி வைத்துள்ளார்.

வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்

இதனால் பணம் இல்லாமல் சாலையோரங்களில் பழுதடைந்த வாகனத்துடன் தவித்து வருகிறோம். எங்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விளக்கம் கேட்க திருச்செங்கோட்டை சேர்ந்த ரிக் உரிமையாளர் தங்கவேலைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:மதுபோதையால் நேர்ந்த விபரீதம்... ஆட்டோ மோதி மூதாட்டி உயிரிழப்பு...

ABOUT THE AUTHOR

...view details