நாமக்கல்லில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் மும்மது அலி கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தியது பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் அளிப்பதாக இல்லை. அந்த ரூ.4கூட 4.3 கொழுப்பு சத்தும், 8.2 இதர சத்தும் உள்ள பாலுக்கே கிடைக்கும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள 75% பால் உற்பத்தியில் 4.0 கொழுப்பு சத்தும், 8.0 இதர சத்துதான் கிடைக்கிறது எனவே இது ஒட்டுமொத்த பால் கொள்முதல் விலையில் லாபத்தை தராது. எனவே பால் கொள்முதலை 50லட்சம் லிட்டராக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.