நாமக்கல்:தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல்செய்யும் பணிகள் தீவிரமடைந்துவருகிறது. இதில் திருநங்கைகள் அரசியல் கட்சி சார்பிலும் சுயேச்சையாகவும் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ள நிலையில் 32ஆவது வார்டில் 6ஆம் வகுப்பு மட்டுமே படித்து தையல் தொழில் செய்துவரும் திருநங்கை சபிதா என்பவர் இன்று குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல்செய்துள்ளார்.
இது குறித்து திருநங்கை சபிதா கூறுகையில், “தொடர்ந்து வாக்காளர்களின் நம்பிக்கை பெற்று வெற்றிபெற்றால் வார்டு பகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்தையும் முன்னெடுத்துச் சரிசெய்வதுடன் வார்டு பகுதி வளர்ச்சிக்குப் பாடுபடுவேன்” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் 32ஆவது வார்டில் திருநங்கை சபிதா வேட்புமனு தாக்கல் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாகத் திருநங்கை சபிதா வேட்புமனு தாக்கல்செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் - ஆர்.பி. உதயகுமார்