தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் முதல் பயோ கேஸ் பேருந்து... விரைவில் இயக்கம் - Bio Case Bus

தமிழ்நாட்டில் முதல் பயோ கேஸ் பேருந்தானது ராசிபுரத்தில் இயக்கப்படுகிறது.

பயோ கேஸ் பேருந்து
பயோ கேஸ் பேருந்து

By

Published : Mar 14, 2021, 2:45 PM IST

உலகில் உள்ள பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசலால் இயக்கப்படுகிறது. இதில் வாகனங்களில் இருந்து வரும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. தற்போதுள்ள வாகனங்களில் சிறியளவு வடிவமைப்பை மாற்றினால், எல்.பி.ஜி., (லிக்கியூடு பெட்ரோல் கேஸ்) எரிவாயுவை பயன்படுத்தி வாகனங்களை இயக்க முடியும். அதேசமயம், சி.என்.ஜி. எனப்படும் கம்பரஸ்டு நேச்சுரல் கேஸ் காய்கறிகள் கழிவு, தாவரங்கள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. ஆனால், பெரிய அளவில் எஞ்ஜின்களை மாற்றம் செய்தால் மட்டுமே பஸ், லாரிகளுக்கு பயன்படுத்த முடியும்.

பயோ கேஸ் பேருந்து

தற்போது, தமிழ்நாட்டில் முதல் முறையாக ராசிபுரத்தில் தனியார் பேருந்து ஒன்றில் சி.என்.ஜி. கேஸ் கிட் பொருத்தப்பட்டுள்ளது. ராசிபுரத்திலிருந்து சேலம்வரை செல்லும் இந்த பேருந்தில், பயோ கேஸ் கிட் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த தனியார் பேருந்து சோதனை ஓட்டம் மட்டுமே முடிந்துள்ளது. இந்த பேருந்தானது விரைவில் தமிழ்நாட்டின் முதல் பேருந்தாக சேலம்–ராசிபுரத்திற்கு தனது பயணத்தை தொடங்கவுள்ளது.

இது குறித்து பேருந்து உரிமையாளர்கள் கூறுகையில், ’டீசல் லிட்டர், 87 ரூபாயாகவும், பெட்ரோல் லிட்டர் ரூ. 94 ரூபாய்க்கு உள்ளது. ஆனால், சி.என்.ஜி கேஸ் ரூ. 56க்குதான் விற்கப்படுகிறது. மைலேஜ் இரண்டும் ஒரே அளவுதான் கிடைக்கிறது. இதனால், 40 சதவீதம்வரை செலவு மீதியாகிறது. சி.என்.ஜி. கிட்‌ பேருந்து டீசல் டேங்கை நீக்கிய பிறகு, தலா 13 கிலோ கொள்ளளவு கொண்ட எட்டு சிலிண்டர்கள் பொருத்தப்படுகிறது. ஆரம்பக்கட்ட பிக்கப் சற்றே குறைவாக இருந்தாலும் வேகமெடுத்த பிறகு வித்தியாசம் தெரிவதில்லை எனக் கூறப்படுகிறது. சிஎன்ஜி கிட்டிற்கு சுமார் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. பயோ கேஸ் பயன்படுத்துவதால் சத்தம், புகை குறைவாக உள்ளது’ என்றார்.

இதையும் படிங்க:கையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியுமா?

ABOUT THE AUTHOR

...view details