நாமக்கலில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.கே.வேல் தலைமை வகித்த இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
"வழக்கறிஞருக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.5 ஆயிரம் வேண்டும்" - வழக்கறிஞர் கூட்டமைப்பு! - வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு
நாமக்கல்: தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு புதுவை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.கே.வேல்," மோட்டார் வாகன விபத்தில் இழப்பீடு வழங்குவதில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத் திருத்தத்தை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும்; தற்போது நீதிமன்றங்களில் இருந்து வருவாய்த்துறைக்கு மாற்றப்பட்டுள்ள பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் பணியை நீதிமன்றங்களுக்கே திரும்ப மாற்ற வேண்டும்" என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.
மேலும் வழக்கறிஞர்கள் இறந்தால் அவருடைய குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தவும் வழக்கறிஞருக்கு உதவித் தொகையாக மாதம் ஐந்தாயிரம் ரூபாய் என ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும்; இல்லையெனில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.