நாமக்கல் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், கரோனா முன்கள பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா கலந்து கொண்டு உதவிகளை வழங்கினர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "தமிழ்நாட்டில் கிசான் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து, முழுமையாக விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும்.
ஆன்லைன் கல்விக்கு 14 விழுக்காடு மாணவர்களிடம் மட்டுமே செல்போன் - இணைய வசதிகள் உள்ளதால் வகுப்புகள் வாரியாக, ஒவ்வொரு பாடத்திற்கு தனி கல்வி சேனல் தொடங்க வேண்டும். கரோனாவை விட பொருளாதார நெருக்கடியால் தொழிற்துறைகளின் பாதிப்பு கொடுமையாக உள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு ரஜினிக்கு இருந்த எதிர்பார்ப்புகள் 2020ஆம் ஆண்டும் இருக்குமா என தெரியவில்லை.
ரஜினியின் செல்வாக்கைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் - யுவராஜா! - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி தலைவர்
நாமக்கல்: ரஜினிகாந்த்திற்கு மக்களிடம் எந்தளவு செல்வாக்கு உள்ளது என்பதை பொறுத்திருந்திருந்து தான் பார்க்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.
யுவராஜ்
ரஜினிகாந்த்திற்கு மக்களிடம் எந்தளவு செல்வாக்கு உள்ளது என்பதை பொறுத்திருந்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.