தமிழ் புலிகள் கட்சி சார்பில் நாமக்கல்லில் தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாகை திருவள்ளுவன் கூறியதாவது, “உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஆகியோர் எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. பட்டியலின மக்களுக்கு நாடு முழுவதும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் அருந்ததியர் சமூகத்தினருக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் கட்சியினருக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளோம். அதிமுகவினர், உட்கட்சி பூசலில் கவனம் செலுத்தாமல், மக்களின் அடிப்படை பிரச்னைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
செய்தியாளர்களை சந்தித்த நாகை திருவள்ளுவன் இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளர் மோடி- பாஜக... அப்போ அதிமுக?