தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என பொய் பரப்புரை செய்யும் அதிமுக அரசு - திமுக கார்த்திகேய சிவசேனாதிபதி குற்றச்சாட்டு - Current Supply in Tamil Nadu

தமிழ்நாட்டிற்கு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி மின்மிகை மாநிலம் என தமிழ்நாடு அரசு பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகின்றது என திமுக சுற்றுசூழல் பாதுகாப்பு அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக ஆலோசனை கூட்டம்
திமுக ஆலோசனை கூட்டம்

By

Published : Dec 15, 2020, 6:58 PM IST

நாமக்கல்:திமுகவின் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியின் ஆலோசனை கூட்டம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இன்று (டிசம்பர் 15) நடைபெற்றது. இதில் திமுக சுற்றுச்சுழல் பாதுகாப்பு அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, பரமத்தி வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகேய சிவசேனாதிபதி, "தமிழ்நாட்டில் மின்சாரம் மின்மிகை மாநிலமாக ஆகிவிட்டது என ஒரு பொய்யான பரப்புரையை தமிழ்நாடு அரசு செய்துவருகிறது.

திமுக சுற்றுசூழல் பாதுகாப்பு அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக என்றுமே ஆகவில்லை, தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி கொடுக்கப்படுகிறது. புதிதாக மின்சார உற்பத்தி செய்யக்கூடிய திட்டங்கள் எதுவுமே கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்படவில்லை. அவ்வாறு உருவாக்கியிருந்தால் எந்த மாதிரியான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என அதிமுகவினர் கணக்கு கொடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:'அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது'- அமைச்சர் செங்கோட்டையன்

ABOUT THE AUTHOR

...view details