தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பரிசு தொகுப்பில் நெய் வழங்க தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை! - tamilnadu latest news

நாமக்கல்: பொங்கல் பரிசு தொகுப்பில் நெய் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொங்கல் பரிசு தொகுப்பில் நெய் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்
பொங்கல் பரிசு தொகுப்பில் நெய் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்

By

Published : Jan 4, 2021, 6:28 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அதன் மாநில பொது செயலாளர் முகமது அலி கலந்து கொண்டார். பின்னர் அவர் பால் உற்பத்தியாளர்களின் பிரச்னைகள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிர்வாகம் 3 மாதமாக வழங்க வேண்டிய 500 கோடி ரூபாய் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு 50 சதவீத மானியம், பாலுக்கு ஊக்க தொகையாக லிட்டருக்கு 5 ரூபாய் வழங்க வேண்டும். ஆவின் நிர்வாகத்தில் ஊழல், முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை தடுத்து, நிர்வாகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொங்கல் பரிசு தொகுப்பில் நெய் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்

அதே சமயம் அதிகளவு புதிய பணியாளர்கள் பணி நியமனம் செய்வதை முறைப்படுத்த வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பில் நெய் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ஆவினை பாதுகாத்திடுங்கள்” - ஆர்பாட்டம் அறிவித்த பால் உற்பத்தியாளர்கள் சங்கம்!

ABOUT THE AUTHOR

...view details