தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் பேரியக்கத் தலைவர் இப்ராகிம் இன்று (டிச. 10) நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பாண்டமங்கலம் பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு அப்பகுதியிலேயே இடுகாட்டிற்கு நிலம் ஒதுக்கித் தரவேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக இஸ்லாமியர்களை இந்து மக்களிடமிருந்து பிரித்து சதிச் செயலை செய்துவருகின்றனர்.