நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த பாச்சல் பிரிவு சாலை அருகே உள்ள தனியார் பள்ளிக்கு பின்புறம் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டடத்தின் முதல் மாடியில், உடல் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக பள்ளி நிர்வாகத்தினர், புதுசத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அழுகிய நிலையிலிருந்து உடலை கைப்பற்றி, அவ்விடத்திற்கே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உடற்கூறாய்வை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.