தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் எம்எல்ஏ திடீர் ஆய்வு - MLA Eeswaran

நாமக்கல் : திருச்செங்கோடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் எம்.எல்.ஏ ஈஸ்வரன் இன்று (மே.28) திடீர் ஆய்வு செய்தார்.

நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் திடீர் ஆய்வு -  எம்.எல்.ஏ ஈஸ்வரன்
நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் திடீர் ஆய்வு - எம்.எல்.ஏ ஈஸ்வரன்

By

Published : May 28, 2021, 10:10 PM IST

திருச்செங்கோடு, நெய்க்காரப்பட்டி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள் உள்ளது. இங்கு நாமக்கலில் இருந்து வரும் உணவு தானியப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டு ரேஷன் கடைகள், சத்துணவுக் கூடங்கள், அங்கன்வாடிகள், இலவசப் பொருள்கள் என அனைத்தும் அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

இந்நிலையில், இன்று (மே.28) கிடங்குகளில் எம்எல்ஏ ஈஸ்வரன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஒரு லாரியில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்ல மற்றொரு லாரிகளுக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது, லாரியில் ஏறி உரிய ஆவணங்களையும், பொருள்களின் தரத்தையும் அவர் ஆய்வு செய்தார்.

அதேபோல், நாமக்கல்லில் இருந்து வந்திருந்த லாரிகளையும் கிடங்கிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல லோடு ஏற்றி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் இருந்த மூட்டைகளையும் எடைபோட்டு சரி பார்த்தார்.

அரசு அறிவுறுத்தலின்படி அரிசி, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் சரியான எடையில் ரேஷன் கடைகளுக்கு கொண்டு சென்று கொடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முறைகேடு ஏதாவது நடப்பதாகத் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அலுவலர்களை எச்சரித்தார்.

இதையும் படிங்க: கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து: வரும் வாரம் முதல் 1,200 ரூபாய்க்கு விற்பனை

ABOUT THE AUTHOR

...view details