நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் பட்டறை மேட்டில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்திவருகிறார். இந்நிலையில் அவரது வீட்டுக்கு அருகே உள்ள காலி இடத்தில் ஜெயகுமார் சடலமாக கிடப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் அருளரசு தலைமையிலான காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மோப்ப நாயை வரவழைத்து துப்பறியும் பணியில் ஈடுபட்டனர்.
காவல் துறையின் விசாரணையில் ஜெயக்குமாரின் தலைப்பகுதியில் பலமான ஆயுதம் கொண்டு தாக்கி படுகொலை செய்தது தெரியவந்தது. அதன் பின்னர் சடலத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர் அதனை உடற்கூறாய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.